அன்பு நண்பர்களே
அன்பு நண்பர்களே
தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com
நன்றி FCA INDIA ஆசிரியர் குழு
சனி, 31 அக்டோபர், 2015
திங்கள், 26 அக்டோபர், 2015
தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள்
மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களை
வெளியிட்டு, ஏழை மாணவர்களை குறிவைத்து, தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள்
செயல்படுகின்றன. நான்கு வாரத்திற்குள் இவற்றை இழுத்து மூட, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டும், தமிழக அரசு, ஆறு மாதமாக மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள், பள்ளிகள்
அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவும் செய்ய வேண்டும். இத்தகைய
பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.
அங்கீகாரம்ஆனால், நர்சிங் கவுன்சில் அனுமதி பெறாமல், மத்திய,
மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவாக் சமாஜ்' அங்கீகாரம் பெற்றதாகவும்,
போலி விளம்பரங்களுடன், தமிழகத்தில், 1,800 நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருவது, தமிழ்நாடு
நர்சிங் கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர்
என, வெவ்வேறு பெயர்களில், 12 விதமான, மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான
படிப்புகள் நடத்தப்படுகின்றன. விவரம் தெரியாத ஏழை மாணவர்கள், 'குறைந்த கட்டணம்; பயிற்சியின்
போதே சம்பளம்...' என்ற, போலி விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர். படிப்பை முடிந்து,
சான்றிதழை பதிவு செய்ய, நர்சிங் கவுன்சில் சென்றால், 'அனுமதி இல்லாத இடத்தில் படித்துள்ளீர்கள்;
பதிவு செய்ய முடியாது' என, திருப்பி அனுப்பும்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.
இவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் கூட வேலை கிடைக்காது.இத்தகைய,
'டுபாக்கூர்' மையங்களை தடுக்க, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி
இன்றி, பாரத் சேவாக் சமாஜ் உள்ளிட்ட, பல பெயர்களில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது,
நான்கு வாரங்களுக்குள், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த
உத்தரவு வந்து, ஆறு மாதமாகியும், இதுவரை, 'டுபாக்கூர்' மையங்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
ஏமாற்றம்:
இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'அனுமதியில்லாத பள்ளிகள் குறித்து, அரசுக்கு அறிக்கை தந்து உள்ளோம். அரசின் அனுமதி
கிடைத்ததும், விரைவில், 'டுபாக்கூர்' மையங்கள் மீதுநடவடிக்கைஎடுக்கப்படும்' என்றார்.நர்சிங்
கல்லுாரிகள், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு முடிந்துள்ள நிலையில், இடம் கிடைக்காத
மாணவர்கள் விவரம் தெரியாமல், இதுபோன்ற, 'டுபாக்கூர்' பள்ளிகளில் சேர்ந்து, ஏமாற வாய்ப்புள்ளது.கர்நாடகாவில்,
இதுபோன்று செயல்பட்ட, 'டுபாக்கூர்' பயிற்சி பள்ளிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோர்ட்
அனுமதி பெற்று, அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. தமிழக அரசு, இதில் சிறப்புக் கவனம் செலுத்தி,
அப்பாவி ஏழை மாணவ, மாணவியர், இந்த கும்பலிடம் சிக்கி தவிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை
எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஏழை மாணவ, மாணவியரை ஏமாற்றும், 'டுபாக்கூர்' நர்சிங் நிறுவனங்களை
மூட, அரசு தயக்கம் காட்டக்கூடாது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், மாவட்ட நிர்வாக உதவியுடன்
இதை செய்யலாம்.
நன்றி தினமலர் நாளிதழ் 25,10,2015 http://www.dinamalar.com/news_detail.asp?id=1371352
புதன், 21 அக்டோபர், 2015
CCHEP Eco awareness for tailoring students
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்
வெள்ளி, 16 அக்டோபர், 2015
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் Food Day 2015
உலக உணவு தினத்தை முன்னிட்டு உதகை ஒய்.எம்.சி.ஏ மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியன சார்பாக உணவு திருவிழா ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி.ஏ செயலர் எல் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் உணவு தினத்தின் சிறப்பினை குறிக்கும் வகையில் ஆவின் தயாரிப்புகள் மற்றும் சிறு தானிய வகைகள், கீரை, காய்கறிகள் கண்காட்சி நடத்தப்பட்டது.
ஆவின் தயாரிப்புகளும் பாலின் உற்பத்தி பொருட்கள் பயன்பாடுகள் குறித்து ஆவின் தர கட்டுபாட்டு அலுவலர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசும்போது பால் மற்றும் அதன்
மூலம் தயாரிக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்க வல்லது. பாலில் இருந்து நெய், வென்னை, பால்பேடா, பண்ணீர், குளிர்பானங்கள், பாலாடைகட்டி,
ஐஸ்கிரிம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை ஆவின் மூலம் மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில்
மட்டுமே உரிய முறையில் பதப்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. ஆவின் பால்இரசாயன தன்மை கிடையாது. பாலிலும், அதன் உற்பத்தி பொருட்களிலும் இருந்து
பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த படுகின்றது. ஆயுர்வேதம், சி்த்தா வகை மருந்துகள் பாலுடன் இணைத்து
சாப்பிட மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
மருந்து தயாரிக்க உதகை ஆவின் மூலம் மாதந்தோறும் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு
பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் அனுப்பபடுகின்றது என்பது குறிப்பிட தக்கது என்றார்.

உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜி. ஜனார்தனன் பேசுகையில் 130 கோடி மக்களின் உயிர்பாதுகாப்பு உணவை சார்ந்தே உள்ளது. இந்நிலையில் உணவு தர கட்டுபாட்டு விசயத்தில் அரசு சமரசம் செய்து கொள்ளகூடாது. உணவு பாதுகாப்பு தர கட்டுபாட்டு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்றி பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டசத்து உணவுகளை மறந்து தரமற்ற உணவுகளை நாடியதால் தற்போது உடல் நல குறைவுடன் உள்ளனர் தரமான சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் என்றார்.
அன்னை சாராதா மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர் அம்பிகா பேசுகையில் உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஆரஞ்சு பழங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜுபெட்டன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மூலிகைகளின் மகத்துவம் குறித்து இந்து நகர் எச்.பி.எப் பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். புலவர் த. சோலூர் கனேசன், புலவர் கமலம், கேத்தி நஞ்சன், சுந்தர பாண்டியன் ஆகியோர் உணவு பாதுகாப்பு தரமான உணவு ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
இந்து நகர் எச்.பி.எப் பள்ளி ஆசிரியர் இரா நாகராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
food day 2015 awareness programme

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)