அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015


நேரு யுவகேந்திரா, மெர்குரி காய்ஸ் இளைஞர் மன்றம், கிரின்வுட் பவுன்​டேசன். கூடலூர் நுகர்​வோர் பாதுகாப்பு ​மையம் சார்பில் கொளப்பள்ளியில் மருத்துவமுகாம்   நடைப்பெற்றது,  நிகழ்ச்சிக்கு இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார்நிர்வாகி கிருஸ்ணராஜ் வரவேற்றார்,  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்சிவசுப்பிரமணியம்ஆலோசகர் காளிமுத்துநேருயுவகேந்திரா ஆண்டம்மாள், வியாபாரிகள்சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர்கள் யோகராஜ்மகேஸ்வரன், ​யோ​கேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்முகாமில் பலருக்கும் ஊட்டச்சத்து கு​றைபாடு மற்றும்​ தைராய்டு கு​றைபாடுகளும், இரத்த​கொழுப்பு, சர்க்க​ரை பிரச்ச​னைகளும் இருப்பது கண்டறியப்பட்டது அதற்கான உணவு மு​றைகள் மற்றும் மருந்துகள் குறித்தும் மக்களி​டை​யே விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 200க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  முகாமிற்கான ஏற்பாடுக​ளை இ​ளைஞர் மன்ற நிர்வாகிகள் ரிசாத், குரு​மோகன், ​கோபிநாத் உள்ளிட்​டோர்​செய்திருந்தனர் முடிவில் இ​ளைஞர் மன்ற நிர்வாகி கிருஸ்ணராஜ் நன்றி கூறினார்.

cchep kollappally medical camp 23.08.2015











cchep kollappally medical camp 23.08.2015








cchep kollappally medical camp 23.08.2015



















செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைப்பெற்றது.

கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைப்பெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி தலைமை தாங்கினார்
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது புதிய கேஸ் இணைப்பிற்கு அடுப்பு உள்ளிட்டவை கட்டாயம் வாங்க சொல்வதை தடுக்க வேண்டும், கேஸ் ஏஜென்சி நியமித்த ஊழியர் தவிர பிறர் எரிவாயு வினியோக வாகனத்தில் செல்வது தடுக்கப்படவேண்டும், எரிவாயு உருளையின் வாய்பகுதி உரிய பாதுகாப்புடன் இல்லாமல் உள்ளது கண்காணிக்க வேண்டும் கேஸ் சிலிண்டர் கேட்டு பதிவு செய்யும்போது அடிக்கடி கேன்சல் ஆவதால் மக்கள் பாதிக்கபடுகின்றனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எரிவாயு பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்மேலும் எரிவாயு நுகர்வோர்கள் சார்பில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தல், வாகனம் உரிய அடையாளத்துடன்  இயக்கவேண்டும் வாடிக்கை யாளர்களிடம் மரியாதை குறைவாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்வேறு பகுதியில் உரிய இடங்களில் வினியோகம் செய்யப்படாமை நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் கூலிதொழிலாளர்கள் பலரும் ஒரிடத்தில் சிலிண்டர்களை இறக்கி வைக்க சொல்லும் போது ஆய்வின்போது பறிமுதல் செய்வதால் பாதிக்கப்படுகின்றனர் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
பதில் அளித்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி பேசும்போது  சட்டப்படி புதிய இணைப்பிற்கு கட்டாயப்படுத்த கூடாது விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணைப்புகளை வாங்கிக் கொள்ளட்டும், உரிய பணியாளர்கள் இன்றி மற்றவர்களை எரிவாயு வினியோகிக்க அனுப்பகூடாது, உரிய பாதுகாப்புடன் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யவேண்டும், மக்கள் அதிகம் உள்ள இடங்களில் அவர்களின் இருப்பிடம் அருகில் சிலிண்டர்கள் இறக்கிதர வேண்டும், வாகனம் உரிய அடையாளத்துடன் இயக்கவேண்டும், நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட வினியோகம் செய்யும் நபர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எரிவாயு முகமைகள் உரிய கண்காணிப்புடன் செயல்படவேண்டும்மேற்படி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ​மேலும் ஒரிடத்தில் அதிக சிலிண்டர்கள்​ வைத்திருப்பது சட்டப்படி குற்றம் எனினும் எரிவாயு பதிவு​ செய்தது மற்றும் உரிய ஆவணங்கள் காட்டினால் அ​வை உரியவர்களிடம் ஒப்ப​டைக்கப் படும் நுகர்வோர் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் மத்தியில் எரிவாயு பயன்பாடு மற்றும் சிக்கனம் தொடர்பாக அனைத்து எரிவாயு முகமைகளும் உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் கவுன்சிலர்கள் எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


சனி, 1 ஆகஸ்ட், 2015

எம் எஸ் எஸ் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

பந்தலூர் அருகே  ப்பட்டி எம் எஸ் எஸ் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது,
நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது,


  https://www.youtube.com/watch?v=8v4304TdvWo





கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சுசிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மன்றத்தினை துவக்கி வைத்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்படுகின்றது.  இந்த மன்றங்கள் மூலம் அவ்வப்போது கூட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  தரமற்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும் என்றார்.
மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் ஓய்வு  கனேசன் பேசும்போது மூலிகைகள் இயற்கையால் கொடுத்த கொடை அவற்றில் பல மருந்துகள் உள்ளன.  இவற்றை மறந்துவிட்டு நாம் தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதணங்களை அதிகமாக பயன்படுத்துகின்றோம் இதனால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு கண் மூளை சம்பந்தமான பாதிப்புகளும் அதிகமாக ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்துஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன்ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் தையல் பயிற்சி மைய மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்,  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா வரவேற்றார்,  முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் நன்றி கூறினார்.