கோத்தகிரி அருகே கேர்பெட்டா ஓசட்டி கிராமத்தில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட இந்திய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் பழனிசாமி பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை நுகர்வோர் அமைப்புகளும் அரசும் மேற்கொண்டு வருகின்றது, நுகர்வோர்கள் தரமான பொருட்களை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. பல்வேறு வியாபார சந்தையில் தரமான பொருட்கள் வாங்குவதன் மூலம் அடிக்கடி பழுதாகி குப்பைகள் தேங்குவது தவிர்க்க முடியும் பண விரையத்தையும் தவிர்க்கலாம். அங்கீகாரம் இல்லாத படிப்புகளை கண்டறிந்து புறக்கணிக்க வேண்டும். சீட்டு கம்பெனிகள் அதிக வட்டி தருவதாக கூறுவதை நம்பி இன்னும் நாம் ஏமாறுவது வருத்ததினை அளிக்கிறது, நுகர்வோர்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்வது அவசியம். அதன்மூலம் தகுதியுடையோர் அரசு உதவிகள் பெற நாம் உதவ முடியும். அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் சுமார் 4000 வரை மானியம் வழங்குகிறது. இதனை நாம் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நுகர்வோர் அமைப்புகள் மட்டுமே தனது அமைப்பு சாராத அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் அமைப்பாகும். அனைவரும் நுகர்வோர் அமைப்பில் பங்கெடுத்து வழுபடுத்த முன்வர வேண்டும் என்றார்.
ஓய்வு பெற்ற டிஎள பி தர்மராஜ் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம், நுகர்வோர் ஏமாற்றங்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நுகர்வோர் குறைகளை சுட்டி காட்டுவோருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன. இதனால் முறைகேட்டில் ஈடுபடுவோர் கொலை மிரட்டல் கூட விடுக்கின்றனர். நுகர்வோர்கள் புகார் தெரிவிப்கபோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும். என்றார்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆலோசகர் பசவராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள்.
கீடோன் அமைப்பை சார்ந்த சாரா மற்றும் கோகுல் நீலகிரியின் தண்ணீர் தேவை மற்றும் தண்ணீரின் முக்கியதுவம் குறித்தும் தண்ணீரை பாதுகாப்பது குறித்தும் குப்பைகள் சேராமல் தடுப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியல் ஊர் தலைவர் மாதா கவுடர் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வின்சென்ட் ராஜ், சுந்தர்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்
முன்னதாக சங்க செயலாளர் லட்சுமணன் வரவேற்றார்,
முடிவில் சங்க துணை தலைவர் ஜிவாணந்தம் நன்றி கூறினார்
ஊர் பொதுமக்கள் நுகர்வோர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக