அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

சனி, 10 ஜனவரி, 2015

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கில் எச்சரிக்கை

பந்தலூர் : நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க, 
மாணவ சமுதாயம் விழிப்படைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி குடிமக்கள், நுகர்வோர் மன்றம் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கினை நடத்தினர்.

மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மார்ட்டின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை செலீன் துவக்கி வைத்தார். 

மையத்தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"மக்கள் விளம்பரங்கள் மீது மோகம் கொண்டு, உடலுக்கும், சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பல நச்சுப்பொருட்களை பயன்படுத்துவதால், பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. அழகுசாதனங்கள், உணவுப்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், என அனைத்திலும் போலியான பொருட்கள் கலந்துள்ளதால், நல்ல பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். வாங்கும் பொருளின் தகவல்கள் மற்றும் விலை அடங்கிய பில் வாங்க வேண்டும். 

மாணவர்களின் கல்வி ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும், சில நிறுவனங்கள், அரசு அனுமதி பெற்றுள்ளதாக, போலியான தகவல் பரப்புகின்றன.  அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படிப்பதால், மாணவர்களுக்கு பண விரயமும், காலவிரயமும் மட்டுமே ஏற்படுகிறது. தவிர, எதிர்காலத்தில் அவர்களால் வேலைவாய்ப்புகள் பெற்று, பயன்பெற இயலாத நிலை ஏற்படும். எனவே, உயர்கல்வி பயில ஆர்வமுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, படித்து பயன்பெற வேண்டும். 

நிர்வாகி தனிஸ்லாஸ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 

செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூர், ஜன.11:

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பந்தலூர் புனித சேவி யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். 

இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார்.

 பள்ளித் தலைமை ஆசிரியர் செலின் கருத்தரங்கினை துவக்கி வைத்தார். 



கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், கணேசன் மற்றம் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக