அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

சனி, 18 ஜூலை, 2015

காமராஜரின் 113வது பிறந்த தினம்

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்  நிலை பள்ளியில் 
காமராஜரின் 113வது பிறந்த தினம் மற்றும் 
கல்வி வளர்ச்சி நாள் கடைபிடிக்க பட்டது 

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எட்வின் மேரி தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் செலின் முன்னிலை வகித்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும் நீலகிரி மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினரும்மான சிவசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் வாழ்க்கை குறித்தும் அவர் கல்விக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் கல்வியின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம் விடமுயர்ச்சி தன்னம்பிக்கை யுடன் கல்வி கற்றல் குறித்து பேசினார்.  தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளை  முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது /

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்,

பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக