அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

வெள்ளி, 3 ஜூலை, 2015

சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்

புதுடெல்லி: சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் உரையாடி வருகிறார். அதில் சுமார் 150 பேரை தேர்வு செய்து அவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், எப்போதும் நல்ல விஷயங்களையே பேசும் படியும் கேட்டுக் கொண்டார். மேலும் எனக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் கொண்டு தாஜ் மஹாலையே மூடி விட முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதையொட்டி சமூக வலைத்தளங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் உரையாடல் நடத்தினார்.

குறிப்பாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு உரையாடல் நடத்துவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனிப்பட்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடும் வகையில் டுவிட்டரில் ஏராளமானோர் எழுதியிருந்தனர். இருந்த போதும் அவர்களின் டுவிட்டர் தளங்களை முடக்க பிரதமர் மோடி உத்தரவிடவில்லை.

மேலும் தனது ஆதரவாளர்கள் எப்போதும் நல்ல விஷயங்களையே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இருந்த போதிலும் யாரையும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க அனுமதிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக