அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

வெள்ளி, 26 டிசம்பர், 2014

Act And Regulations

Act And Regulations
Airlines
Banking
Broadcasting and Cable Services
Consumer Protection Act
Education
Electricity
Food and Supply
Insurance
Miscellaneous
Petroleum LPG, PNG, CNG
Postal
Real Estate
Right To Information
Telecom

Responsibilities of Consumers

Ask Yourself!
Have you faced any problems as a consumer?
Have you ever complained when you have had such a problem?
Do you know that you could seek the assistance of a consumer group to protect your interests?

Be Critically Aware
The responsibility to be more alert and to question more – about prices, about quantity and quality of goods bought and services used.
Be Involved
The responsibility to be assertive – to ensure that you get a fair deal as a consumer. Remember, if you are passive, you are likely to be exploited.
Be Organized
The responsibility to join hands and raise voices as consumers; to fight in a collective and to develop the strength and influence to promote and protect consumer interest.
Practice Sustainable Consumption
The responsibility to be aware of the impact of your consumption on other citizens, especially the disadvantaged or powerless groups; and to consume based on needs – not wants.
Be Responsible to the Environment
The responsibility to be aware and to understand the environmental consequences of our consumption. We should recognize our individual and social responsibility to conserve natural resources and protect the earth for future generations.

consumer Rights

Right to safety:
It refers to the right of a consumer to be protected against hazardous effects of all possible consumption patterns and to all goods and services which may affect life and property.
Right to choose:
The right to choose means the right to be assured, wherever possible, access to a variety of goods and services at competitive prices.
Right to information:
The right to information not only means disclosure regarding weight or price or the MRP of the product, i.e. the physical properties of the product and service but also the legal implications of the transactions.
Right to be consumer education:
Consumer education empowers consumers to exercise their consumer rights. It is perhaps the single most powerful tool that can take consumers from their present disadvantageous position, to strength them in the marketplace.
Right to a safe and healthy environment:
Since the beginning of civilization man has been disturbing the ideal balance of nature. Using natural resources is not harmful because nature has its own cleaning mechanism. But rapid industrialization, deforestation, etc. the environment is deteriorating fast.

The need for environmental conservation is seen as a necessary defence against deteriorating quality of life world -wide. Consumers need to understand that only a safe environment can ensure the fulfilment of their rights.
Right to basic needs:
 The right to basic needs is an important right which has been conferred by UN on developing countries for consumers to lead a normal life.
Right to be heard:
 The right to be heard means that consumers should be allowed to voice their opinions and grievance at appropriate forums.
The right to seek redressal:
 A consumer has the right to seek redressal for any goods, deficiency in services and loss due to unfair trade practices.  Everyday the manufactures are finding new ways of cheating and duping the consumer.
As the markets are globalizing, the direct link between the manufacturer and the final user getting distant, post purchase grievances have to be heard through a strong redressal system. For this,Consumer disputes redressal agencies (popularly known as Consumer Forums or Consumer Courts) are set up under the Act at District, State and National level to provide simple and inexpensive quick redressal against consumer complaints. The District forum deals with complaints where the compensation sought is less than 23 lakhs. This limit is commonly known as the ‘pecuniary jurisdiction’ of the Consumer Redressal Forum. The State Forum deals with the complaints where the value of the goods and services and compensation claimed does not exceed rupees one crore and the National Forum entertains the complaints where the value of the goods or services and compensation claimed exceeds rupees one crore.
 The Consumer Forum can order the company to take the following actions once it hears the complaint and decides that the company is at fault:
Correct deficiencies in the product to what they claim. 
Repair defect free of charges 
Replace product with similar or superior product 
Issue a full refund of the price 
Pay compensation for damages / costs / inconveniences 
Withdraw the sale of the product altogether 
Discontinue or not repeat any unfair trade practice or the restrictive trade practice
Issue corrective advertisement for any earlier misrepresentation
 
Consumer Protection Act
“An Act to provide for better protection of the interests of consumers and for that purpose to make provision for the establishment of consumer councils and other authorities for the settlement of consumers' disputes and for matters connected therewith.”(According to Consumer Protection Act,1986).

Consumer Protection Act ,1986 seeks to promote and protect the interest of consumers against deficiencies and defects in goods or services. It also seeks to secure the rights of a consumer against 

Consumer Protection Act

View(PDF 40 KB )
Source from :
www.India.gov.in
unfair or restrictive trade practices. This act was passed in Lok Sabha on 9th December,1986 and Rajya Sabha on 10th December, 1986 and assented by the President of India on 24th December, 1986 and was published in the Gazette of India on 26th December, 1986.

சனி, 20 டிசம்பர், 2014

இயற்கையோடு இழையோடிய வாழ்க்கை முறைகள்,




ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர்.

நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்...நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த எத்தனையோ பொருட்கள், காலமாற்றத்தால் மறைந்துவிட்டன. இயற்கையோடு இழையோடிய வாழ்க்கை முறைகள், பருவம் கண்டுபயிர் செய்த வானவியல் அறிவு, பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து உழவுத்தொழிலை காக்க, விதைகளை கோவில் கலசங்களில் பாதுகாத்து வைத்த அறிவு

கூர்மை ஆகியவை, இந்திய விவசாயத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதி, கோவை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று, யானைக்கட்டி போர் அடித்த பகுதி இது என பெருமை பேசப்படுகிறது.


சேமிப்புக் கிடங்குகள்:

விதை தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் தானியங்களை பாதுகாத்து வைக்க, நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றினர். அவற்றில் குதிர், கோட்டை, மதங்கு, பத்தாயம், சோளக்குழி ஆகியவை முக்கியமானவை.விவசாயம் மட்டுமே தெரிந்த அந்த காலகட்டத்தில், ஆனைமலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை. பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல்சாகுபடியும், மானாவாரி விவசாயமாக சோளம், நிலக்கடலை, கம்பு மற்றும் ராகி, போன்ற சிறுதானியங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்குப்பின் நெல்லை பாதுகாக்க குதிர்களும், சோளத்தை பாதுகாக்க சோளக்குழிகளும், மதங்குகளும் பயன்பாட்டில் இருந்தன.


விதை பாதுகாப்பு:


விதை நெல் தேவைக்கு யாரையும் சாராமல் இருக்க, நமது முன்னோர்கள் அறுவடைக்குப்பின், நன்கு உலர்த்தப்பட்ட பயிர்களை, வீடுகளில் உள்ள குதிர்களில் சேமித்து வைத்திருந்தனர். குதிரின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இந்த பகுதியில் உள்ள குதிர்கள் 4 முதல் 6 அடி உயரமும் 2 அடி வரை விட்டமும் கொண்டது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழியைக் கொண்டே ஒரு மனிதன் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு, அளவில் பெரிதாக இந்த மண்பானை குதிர்கள் இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.


சோளக்குழி:


நிலத்தின் அடியில் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கு 'சோளக்குழி' என்றும், தரைமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்ட கிடங்கு 'மதங்கு' எனவும் அழைக்கப்பட்டது. வீட்டின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில், இந்த சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு அடி ஆழம் அல்லது உயரம், 5 அடி நீளம், அகலம் கொண்டே பெரும்பாலான சோளக்குழிகள் அமைக்கப்பட்டன. கற்கள் மற்றும் சுண்ணாம்பு அல்லது மண் கலவை கொண்டோ இது அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பகுதி பெருத்தும், வாயிற்பகுதி குறுகியும் காணப்படும்.தானியங்களை சேமிக்கும் போது, பூச்சிகள் வராமல் இருக்க நொச்சி, புங்கன், வேப்பிலை இலைகள் தானியங்களுடன் கலந்து வைக்கப்படும். இதனால் அவற்றின் முளைப்புத்திறனும் கெட்டுப்போகாமல் இருக்கும்.


மதங்கு:


எட்டடி உயரத்திற்கு சுண்ணாம்பு, ஓடைக்கற்கள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு வட்டவடிவில், சுற்றளவு அடிப்புறத்தில் அதிகரித்தும் மேற்பகுதி குறுகியும் கட்டப்பட்டதே மதங்கு. உள்ளே சுண்ணாம்புக்கலவை கொண்டு பூசப்பட்டு, சாணியால் மெழுகப்பட்டிருக்கும். உள்ளே உணவு தானியங்கள் கொட்டப்பட்டு, அதன் வாயிற்பகுதி பலகை கல் கொண்டு அடைத்து, சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு இருக்கும். தேவைப்படும் பொழுது ஏணியை பயன்படுத்தி, உள்ளே இறங்கி தானியங்களை எடுத்து பயன்படுத்துவார்கள்.ஒவ்வொரு போகமும் நெல் அறுவடை தொடங்கும் போது, விதைக்கான நெற்கதிர்களை அடையாளம் கண்டு அவற்றை தனியாக அறுவடை செய்து உலர்த்தி பதப்படுத்துவார்கள். அந்த நெல்லை அடுத்த பருவத்திற்காக பக்குவபடுத்தி வைக்கும் சேமிப்பு கிடங்குதான் குதிர்களும், மோடாக்கள் என அழைக்கப்படும் கூன்களும் ஆகும். இவைகள் எல்லாம் தற்போது வழக்கத்தில் இல்லை.


'பாரம்பரியத்தை மறக்காதீர்':

ஆனைமலை பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. தற்போது விதை நெல் முதல் உணவு வரை அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறந்து, பன்னாட்டு விதை கம்பெனிகளை நோக்கி கையேந்தாத வரைதான், நம் நாட்டில் வேளாண்மை உயிர்ப்புடன் இருக்கும்.பாரம்பரிய தொழில்நுட்பங்களை மறந்தால், 'ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா; காசுக்கு ரெண்டு விக்க சொல்லி கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்' என்ற விடுதலை போராட்ட கால பாடலை, மீண்டும் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா?

அச்சம் என்ற இருளில் இருந்து மனிதனை விடுபடச் செய்தது, நெருப்பு தந்த வெளிச்சம். எடிசன் மூலமாக மின்விளக்காக மாறிய அந்த நெருப்பு இன்று பல்வேறு வடிவங்களில் உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது.



நெருப்பை ஆதி வடிவத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு அதிகமான வெளிச்சத்தை விளக்குகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் அவை காரணமாக இருக்கின்றன.

குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், புவி வெப்பமடைதல் (global warming) பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பதும் நாம் அறிந்ததுதான்.

அதற்கு மாற்றாக சி.எஃப்.எல். (Compact Fluorescent Lamps) விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அரசே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததால், மக்கள் மத்தியில் இந்த வகை மின்விளக்குகள் பிரபலமடைந்துள்ளன.

அரசு ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி ஒரு படி மேலே போய், வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சி.எஃப்.எல். மின்விளக்குகளைக் கொடுப்பதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 1.2 கோடி விளக்குகளை விநியோகமும் செய்தது.

இதுபோன்ற முயற்சிகளால் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருந்த குண்டு பல்புகள், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுங்கிக் கொண்டிருக்கின்றன.

புவி வெப்பமடைதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உலகம் முழுவதும் முனைப்பு காட்டப்படும் இந்த வேளையில், சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். அதேநேரம் சி.எஃப்.எல்.

பல்புகள் மின்சாரச் சிக்கனம் செய்வதைத் தாண்டி, சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

மினமாட்டா விபத்து

சி.எஃப்.எல். பல்புகளில் பாதரசம் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது பலருக்கும் தெரியாது. இந்த வகை பல்புகளில் 4 மில்லிகிராம் வரை பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. பாதரசம் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் நண்பனல்ல.

ஜப்பானின் மினமாட்டா (Minnamata) நகரில் பாதரச மாசு கடலில் கலந்ததன் காரணமாக, மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. மீன்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதந்தன.

கடல் உணவைச் சாப்பிட்டவர்களுக்கு இன்னதென்று அறிய முடியாத நோய்கள் ஏற்பட்டன. குறிப்பாக நுரையீரல், சிறுநீரகம், மைய நரம்பு மண்டலப் பாதிப்பால் பல்வேறு நோய்களால் மக்கள் பீடிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம்தான் பாதரசம் என்ற வேதிப்பொருளின் நச்சுத்தன்மை குறித்து உலகில் விழிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உலகம் முழுவதும் பாதரசக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கின.

அப்புறப்படுத்துதல்

இத்தகைய பின்னணியில்தான் சி.எஃப்.எல். விளக்குகள் தொடர்பான பிரச்சினையைப் பார்க்க வேண்டும். எரிந்து கொண்டிருக்கும்வரை இந்த விளக்குகளில் இருந்து பாதரசம் வெளியேறுவதில்லை.

பழுதான பின்னர்தான் பிரச்சினையே. பழுதடையும் விளக்குகள் பெரும்பாலும் உடைக்கப்படுவதால், அதில் உள்ள பாதரச நஞ்சு வெளியேறி, சுற்றுப்புறத்தில் கலக்கிறது.

இதில் நேரடியாகப் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் குப்பைக் கூளங்களில் குப்பை சேகரிக்கும் துப்புரவாளர்களே. இந்த மின்விளக்குகளை மறுசுழற்சி (Recycling) செய்ய முடியும் என்றாலும், அது தொடர்பாகப் போதுமான விழிப்புணர்வு இல்லை.

சாதாரணமாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள். இதனால் பத்தோடு பதினொன்றாகச் சுற்றுச்சூழலை அவை நாசம் செய்துகொண்டிருக்கின்றன.

மறுசுழற்சி

சி.எஃப்.எல். பல்புகளில் கலந்திருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான வேதிப்பொருள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் தேவை. அப்போது அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஓரளவாவது ஏற்பட்டுவிடும்.

இதை அரசு முன்னின்று நடத்த வேண்டும். உதாரணமாக, புகையிலையால் ஏற்படும் தீங்குகளை விளக்க சிகரெட் அட்டைகளிலேயே எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் புகையிலையின் நுகர்வு குறையவில்லை என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், புகையிலையின் தீங்குகள் குறித்துச் சாதாரண மக்களும் அறிந்துகொண்டிருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பல்புகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த, அவற்றின் அட்டைகளில் பாதரசம் குறித்த எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்.

அதேபோல், பல்பு தயாரிப்பு நிறுவனங்கள் மறுசுழற்சி மையங்கள் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பயன்படுத்தி முடிந்த பல்புகளை இந்த மையங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு அதிகம் என்பதால், இந்தச் செயலைச் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும்போது சி.எஃப்.எல். மின்விளக்குகள் சுற்றுச்சூழலின் இணைபிரியாத தோழனாக இருக்கும்.

நன்றி : தினகரன்

மருந்து வாங்கும் போது தெரிந்து இருக்க வேண்டிய எச்சரிக்கைகள்...!!

1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள். கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக்கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனிலும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசரமானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின் பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

6. எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள் என தயாரித்த தேதியிலிருந்து போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள். ஒரே வகையான மருந்து 6 மாதம் என ஒரு கம்பெனியும், மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக்கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை 
மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் 
வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்' வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்துகளை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப்புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

8. மருந்துகள் குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம். சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். 
அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை 
வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் 
போனதை அந்த லேபிள் கலர் மாறுவதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும். மருந்து வாங்கும் போது, மேல் கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)


         வணக்கம் உறவுகளே முன்னையா பதிவான பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்  இலும் சொன்னேன் இதிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன் நான் ஒரு தேநீர் பிரியன் (அடிமை என்பதே சரியானது).
         இந்த விடயத்தை நண்பர் குருபரன் தான் நினைவுக்கு கொண்டு வந்திருந்தார். நன்றி குரு. வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
             தேநீரென்பது சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அத்துடன் அது தயாரிப்பதற்கு கட்டாயம் சீனி மற்றும் தேயிலை அத்தியாவசியமான பொருட்களாகிறது. அதன் கிக்கிற்கு காரணமே தேயிலை தான் அனால் தேயிலை கொஞ்சம் விலை கூடிய பொருள் பல தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிடைப்பதே இல்லை. அதற்கு தீர்வு தரும் ஒரே வழி என்ன தெரியுமா ? கீழே வாருங்கள்....
          ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் சிறிதளவு சீனியை போட்டு வடிவாக சூடு காட்டுங்கள் அலுமினியப் பாத்திரம் எடுத்ததன் காரணம் மண் பாத்திரமானால் சினீப்பாணியை அது உறிஞ்சி விடும் அதனால் தான்.
              சரி இப்போது சினி கொஞ்சம் கரியாகும் வரை காய்ச்சுங்கள் மூக்கை அரிக்கும் வாசம் ஒன்று எழும் அதே போல் காய்ச்சும் போது நீரை விடக் கூடாது
காரணம் அப்படி விட்டால் பின்னர் சீனி காய்ச்சப்பட்டு வற்றுவது கடினம் கருகாது. இப்போது கருகி வந்துவிட்டதா சரி அடுத்த கட்டமாக பானையை இறக்கி அதை கட்டிபட விடுங்கள்
          அத்துடன் படிந்துள்ளதையும் சுரண்டி எடுங்கள் அப்புறம் தேநீருக்கு தேவையான அளவு நீரை விட்டு சூடாக்குங்கள் நன்கு சூடானதும் இந்த பாணிக் கட்டியை போடுங்கள்
               தேயிலை அளவுக்கு நிறம் இல்லாவிடினும் கலவை அளவு மாறாவிடின் சுவையும் மாறாது அருமையான தேநீர் கிடைக்கும்.
                    யாரும் சண்டைக்கு வராதிங்கப்பா சும்மா ஒரு அனுபவப் பகிர்வு தான் இது தொடரும் முன்னையா இடக்கு முடடக்கப் பதிவுகள் கிழே உள்ள தொடுப்பில்.. (ஆனால் இங்கு பொய்யாகவோ மிகைப்படுத்தியோ நான் பகிரவில்லை உறவுகளே)

காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி... 
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு (உறவுகளே இந்த பதிவின் கருத்தையும் படிக்க தவற வேண்டாம் இது ஒரு காலப்பதிவு. புயலுக்கு முன் வீசிய தென்றல் வருடிய இடம்)

குறிப்பு - உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் இனி வழமை போல வாரமொரு பதிவும் வாரமொரு தளவருகையுமமென என் பயணம் தொடரும். என்னை நலம் விசாரித்த அத்தனை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.

இயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.

           இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்கள் ஏராளம். நம் உடலில் இயற்கை அமைத்துள்ள இயக்கங்கள் என்றும் நின்று இயங்குவன. மனிதன் சுய கட்டுப்பாடின்றி செய்யும் சில காhpயங்கள் உடலில் பல உபாதைகள் உருவாக வழிவகுக்குக்கின்றன. 
   விந்தைமிகு விஞ்ஞானிகள் இயற்கைக்கு ஈடு கட்டும் விதமாக நாளுமொரு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உடல் உபாதைகளுக்கு மாற்று வழிகள் உருவாக்கி வருகின்றனர்.
   இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்போது அவாpன் உடலிலிருந்தே செல்களை எடுத்து, அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரத்த நாளங்கள் உருவாக்கி பொருத்தி வந்தனர். இதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த கால அவகாசம், பலாpன் அவசரத் தேவைக்குப் பயன்படவில்லை.
   தற்போது, செல்களைத் தானமாகப் பெற்று, இயற்கையாகக் கிடைக்கும் புரோட்டீன்களுடன் சோ;த்து, ஆய்வுக்கூடங்களில், இரத்த நாளங்களை உருவாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.அவ்வாறு உருவாக்கப்படும் இரத்த நாளங்கள், ஒரு வருடம் வரை பத்திரப்படுத்த முடியுமென்பதும் மேலும் ஒரு ஆறுதலான செய்தி. 
   என்ன செய்தாலும் இயற்கையை வெல்லவும் முடியவில்லை. இறக்கும் நாளை சொல்லவும் முடியவில்லை. இறப்பென்றாலும் சரி இயற்கை சீற்றமென்றாலும் சரி எப்போது வரும், எப்படி வருமென்று சொல்ல இன்னும் முடியவில்லை.


Read more: http://www.unavuulagam.in/2011/04/blog-post_25.html#ixzz3MQxHb2UJ

புகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு!

புகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு!

              
புகையிலைப் பழக்கம் சிலரை மட்டுமே அடிமையாக்கி வைத்திருந்த காலம் மாறி,
 புகையிலைப் பழகா இளம் சந்ததியினரே இல்லையென்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்.


Read more: http://www.unavuulagam.in/2011_08_01_archive.html#ixzz3MQwe7e3w



இன்று ஒரு இனிய(!) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.

                                  குடிக்கின்ற நீரிலும் கொள்ளையடிக்க  துடிக்கின்ற கூட்டம்.  ஐம்பது வகை அடுக்கடுக்கான சோதனைகள். அனைத்தையும் வென்று வந்தால் மாத்திரம்  "ISI" தர முத்திரை. இருந்தும், இன்னல் தரும் எத்தர்கள், ஏமாற்றும் வித்தை கற்றவர்கள்.
           விழிப்புடன் இருந்தால் வேதனைகள் தவிர்க்கலாம். 
Follow FOODNELLAI on Twitter
  


Read more: http://www.unavuulagam.in/2011/01/blog-post_13.html#ixzz3MQwpN2kr

கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.

கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.

                                        கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள். 

சைவ உணவே சத்தென்று சாப்பிடும் சமத்து  பிள்ளைகளா நீங்கள்! 
பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று 
எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா? 
கவனம்! 
கலப்படம் -
காய்கறியிலும் கால் பதித்து விட்டதாம். 


வாழை பழங்களையும், மாம்பழங்களையும் கந்தக கல் கொண்டு 
பழுக்க வைத்தனர். வந்து குவிந்த வசதியினால்,
 காசு  பணம் பார்ப்பது மட்டுமே தம் கவலை என்று 
காய்கறியிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளனர். 

கவனம்! 

சமீபத்தில், மத்திய மக்கள் நல்வாழ்வு துறை 
இணை அமைச்சர் திரு. தினேஷ் திரிவேதி,
"ஆக்சிடோசின் " எனும் அருமருந்து அளவின்றி 
காய்கறி மற்றும் பழங்களில் பயன்படுத்தபடுவதாக 
பகிரங்கமாய் அறிவித்து தம் 
வேதனையை தெரிவித்துள்ளார்
."ஆக்சிடோசின்", பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்,
 நஞ்சுக்கொடி வெளியேற மருத்துவர்கள் மட்டுமே 
பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்து. 



பாகற்காய் ஜூஸ் பருகிய நபர் பட்டென்று போய்விட்டதாக 
செய்திகளில் காண்கிறோம். மருந்து கடைகளில் 
மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே விற்கப்பட 
வேண்டிய இந்த வில்லனை, 
பால் மாடு வளர்போரும், காய்கறி தோட்டம் வைத்திருபோரும்
கவலை ஏதுமின்றி வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர். 


பால் கறக்கும் மாட்டில் இதை பயன்படுத்தினால்,
அந்த ஹார்மோன், பசு தரும் பாலிலும் கலந்து, 
அதை அருந்தும் மனித உடலிலும் கலந்து, 
சிறுமிகள் விரைவில் பூப்பெய்திடவும், 
கர்ப்பிணிகள் கர்ப்பம் தொலைத்திடவும் 
காரணிகளாய் அமைகின்றன.

"ஆக்சிடோசின் " மருந்து 
ஏற்றிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால்
இதய கோளாறுகள் இனிதே வந்து சேரும். 
நரம்புகள் பாதிப்பதால், மறதியும், மலட்டு தன்மையும் 
மறக்காமல் வந்து சேரும்.


அத்தகைய அருமருந்தை, 
காய்கறி செடிகளில் ஏற்றி,
 காய்கறிகள் மற்றும் பழங்கள் 
பச்சை பசேலென பழபழக்க பக்குவபடுத்துகின்றனர்.
            

மனிதா உன் பேராசைக்கு மரித்து விட்டதோ மனிதங்கள்!
உன் வீட்டிலும் ஒருவன் படுத்துவிட்டால்தான் 
அந்த வலி உனக்கு புரியுமென்றால், 
இறப்பதற்கு இங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.