அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

சனி, 20 டிசம்பர், 2014

”உணவுக் கலப்படத்தை அறிவோம்”3

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்...?  எவ்வளவு விபரீதம்!

“உணவுக் கலப்படத் தடைச் சட்டம்’ 1954 நீக்கப்பட்டு ஆகஸ்டு 2011 முதல் “உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம்’ 2006 அமுலுக்கு வந்துள்ளது, இச்சட்டத்தில் “கலப்படம்’ என்ற சொல் நீக்கப்பட்டு பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், “கலப்படம்’ என்ற சொல்லுக்கான விளக்கம் புதிய சட்டத்தில் மறைமுகமாகக் கையாளப்படுகிறது.

உணவுக் கலப்படம் பற்றிய சட்ட விளக்கம்: உணவு பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்ந்த பொருட்கள் கலப்பட பொருட்கள் எனப்படும்.

உணவு பாதுகாப்புத் தரச் சட்டத்தில் பாதுகாப்பற்ற உணவு என்பதற்கு பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* தரம் குறைந்த விலை குறைந்த பொருட்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உணவு பொருளின் தரத்தை குறைக்கும்படி சேர்க்கப்பட்டிருந்தால்

*உணவில் உள்ள பொருட்கள் முழுமையாகவோ பகுதியாகவோ பிõருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அதனால் தரம் குறைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டால்

கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்: சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும்.

பால் கெட்டுப்போகாமல் இருக்க சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் ஆகியவை சேர்க்கப்படுவதால் குடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.

உணவில் அனுமதிக்கப்படாத வண்ணங்களான மெடானில் எல்லோ, ரோடமின் - பி.ஆரமின், ஆரஞ்சு 2, மாலசைட் கிரீன் ஆகியவை கல்லீரல் , சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் ஆகியவற்றை தாக்கி குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

கலப்படத்தினால் ஏற்படும் பாதிப்பு: உணவுக் கலப்படத்தினால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமின்றி, உணவு கலப்படம் பல்வேறுகேடுகள் மற்றும் வியாதிகள் வரக்காரணமாகிறது. கலப்பட உணவில் கற்களும், மணலும், இருக்குமாயின் அது பற்களையும், குடலின் உட்பகுதியில் இருக்கும் மெல்லிய சதையையும் பாதிக்கும், அழுக்கு இருந்தால் பாக்டீரியா மூலம் வியாதியை உண்டாக்கும் நுண்ணுயிரியை சுமந்து வரும் டால்க் மற்றும் சுண்ணாம்பு பவுடர் நம்மால் ஜீரணிக்கப்படாமல் செரிமான சக்தியை பாதிக்கும், தூய்மையற்ற நீர் பல வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வரக் காரணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக