அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

சனி, 20 டிசம்பர், 2014

உணவு மாசுபடுதல்:

உணவு மாசுபடுதல்:

* உணவிலுள்ள நுண்ணுயிர்களாலோ, பாக்டீரியாக்களாலோ, அவற்றில் ஏற்படும் விஷத்தன்மையாலோ, அது உண்பதற்கு லாயக்கற்றதாகும் போது அதனை மாசுபடுதல் என்கிறோம்.

*பல்லாயிரக்கணக்கானோர் இந்த உணவு மாசுபடுதலால் ஏற்படும் உணவு தொடர்பான வியாதிகளால் பாதிக்ப்படுவதாலும், இது ஒரு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது.

*ஏற்கனவே கூறியபடி நுண்ணுயிர்களாலும் சுற்றுப்புற மாசாலும் இது ஏற்படுகிறது. பூச்சி மருந்து அடிப்பதாலும் அவற்றில் உள்ள உலோகத்தாலும் மற்ற இரசாயன கலவைகளாலும் இது ஏற்படுகிறது. உணவு தயாரிக்கும்போது விநியோகம் செய்யப்படும்போது இத்தாக்குதல்கள் நிகழ்கின்றன.

உணவு மாசுபடுதல் ஒரு விளக்கம் : சுற்றுப்புறத்தாலும் நுண்ணுயிர்களாலும் உணவு மாசுபடலாம். பூச்சிக்கெல்லிகள், உலோகங்கள், பிறவேதியல் பொருட்கள் சேர்வதற்கு சுற்றுப்புறம் ஒரு காரணமாகலாம். உணவு தயாரித்து பரிமாறப்படும்போது இறைச்சியிலிருந்து பாக்டீரியாக்கள், கோழிமுட்டையிலிருந்து நுண்ணுயிர்கள், மிருகம் வதைக்கும் இடங்களிலிருந்து அயல் சேர்க்கைகள் மூலம் உணவு மாசுபடுகிறது. தூய்மையற்ற நீரில் பழங்கள், காய்களிகள், கழுவப்படும்போது உரங்கள், மனிதக் கழிவுகள் நீரில் சேர்வதாலும் சுகாதாரமற்ற கைகள் மற்றும் சுற்றுப்புற தூய்மைகேட்டாலும் உணவு மாசுபடலாம்.

சில பாக்டீரியாக்கள்

* க்ளோஸ்டிரியம் போடுலினம் - போடுலிஸம் என்பவை விஷத்தன்மை, உணவில் உருவாக காரணமாக இருப்பவை. நரம்பு நோய்கள் உருவாக இவை காரணமாக உள்ளன.

*எச்செரிக்கியாகோலை - உணவு மாசுபடக்காரணமாகும் பாக்டீரியாக்களில் முதன்மையானவை, இவ்வகை பாக்டீரியாக்கள், பச்சைப்பால், கோழி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் உள்ளன.

*சால்மனல்லாடை பீரியம், கோழி, பச்சைக் காய்கறி மற்றும் பால் பொருட்கள் மாமிச பொருட்களில் அதிகம் காணப்படுகின்றன.

* ஸ்டோபி லோகஸ் அவரியஸ் - க்ரீம் உள்ள பேக்கரி பொருள்கள், கோழி இனப்பொருட்கள், உருளை முதலிய காய்கறிகளில் காணப்படுகின்றன.

* விப்ரியோ காலரா - நீர் மற்றும் உணவில் பரவும் இவ்வகை பாக்கடீரியாக்கள் காலரா நோய் உருவாகக் காரணமாகின்றன.

*பால் திரியக் காரணமாகும் பாக்டீரியாக்கள் லாக்டோபேஸில்லஸ், எண்டிரோபாக்டர், ஹெடிரோஜீன்ஸ்.

*தண்ணீர் மாசுபடுதலுக்கு காரணமான பாக்டீரியாக்களான ஈகோலை, பக்ளோஸ்ட்ரியம், மற்றும் எண்டிரோகோகி இவை பெரும்பாலும் நமது முகங்களிலும் மிருகங்களின் முகங்களிலும் உள்ளன.

எளியமுறைகளில் இத்தகைய அபாயங்களை தவிர்க்கலாம்: சாதாரண சீதோஷ்ணத்தில் உருவாகும் பாக்டீரியாக்கள், குளிர்பதன பெட்டிகளில் பொருட்கள் வைக்கப்படும்போது அழிந்து போகின்றன. மாமிசம் ஆகியற்றை கையாளும்போது மிகவும் ஜாக்கிரøயாக இருக்க வேண்டும். மரக்கறி உணவும் மாமிச உணவும் கலந்து பரிமாறப்படும் உணவு பகுதிகளில் எச்சரிக்கை தேவை.

உணவு மாசுபடுதலைத் தவிர்க்கும் வழிகள்:

* உணவுக் கூடங்கள், பாத்திரங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பவரின் கைகள் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும். இது அயல் மாசுபடுதலைத் தவிர்க்க உதவுகிறது.

* அது போலவே சமைத்த/சமைக்காத உணவுகளை குளிர்பதனப் பெட்டியில் அருகருகே வைக்கக்கூடாது.

பாதிப்புகள்: உணவு 70 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க வேண்டும். அது போலவே உறைத்து வைக்க வேண்டியவற்றை (எளிதில் கெட்டுப் போகக் கூடியவை) குளிர் பதனப் பெட்டியின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்க வேண்டும் இவற்றில் வ்கப்படும் மாமிச உணவுகளை மெல்லிய பாலீதீன் உறைகளால் மூடிவைக்க வேண்டும். இதிலிருந்து கசியும் நீர் மற்றப் பொருட்களைப் பாதிக்கும். இவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குளிர்ந்த நீரில் தொடர்ந்தும் வைத்திருக்கலாம்.

மீந்து போன உணவை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, வைத்திருக்கக் கூடாது. குளிர்ந்த உபயோகப் படுத்த வேண்டிய உணவை (உம்) ஐஸ்க்ரீம் குளிர்பதனப் பெட்டியின் அறையிலும், சூடான உணவை ஓவன்களில் வைத்தும் அதன் உஷ்ணத்தைப் பாதுகாக்கவும், ஒரு உணவுப் பொருளின் தரத்தைப் பற்றி ஐயம் ஏற்பட்டாலே, அதனை வெளியே எறிந்துவிட வேண்டும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட மாசுபட்ட உணவு காரணமாகிறது. ஆனால் கெட்டுப் போன உணவில் உள்ள பாக்டீரியா நமது உடலில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உண்டபின் பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்துக்கூட, பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சமயத்தில் அவை பல்கிப் பெருகி விஷத்தன்மையை இரத்தத்தில் கலக்கச் செய்யும் ஒரு சில பாக்டீரியாக்கள் திசுக்களை நேரடியாகத் தாக்கும். ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் வேறுபட்டாலும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, குமட்டல் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும்.

உணவுப் பாதுகாப்பில் நுகர்வோருக்கான குறிப்புகள்: உணவைக் கையாளும் போது சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும்.

* சமையலறையையும் சமையல் சாதனங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் சமையல் செய்பவரும் உடல் சுத்தம் பேண வேண்டும்.

* தேவையான அளவு உஷ்ணத்தைப் பயன்படுத்தி உணவு சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவை 70 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்திலேயே வைத்து உட்கொள்ள வேண்டும்.

* சூப், சாஸ் ஆகியவற்றை அவற்றின் கொதிநிலை வரை சூடாக்க வேண்டும்.

* சமைத்த மற்றும் சமைக்காத மாமிச வகை உணவுகளை, குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

* பழங்கள், காய்கறிகள், விரைவில் அழுகக்கூடிய மற்றும் மீந்து போன உணவுப் பதார்த்தங்களை 2 மணி நேரத்திற்குள் குளிர்ப்பதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும்.

* குளிரூட்டுவதற்கு வய் அகன்ற பாத்திரங்களில் வைக்க வேண்டும். பதனப் பெட்டியில் உஷ்ணம் 4 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உணவு அøட்கப்பட்ட டின்கள்/கேன்களில் வடிவம் மாறியிருநதால் அவை நிராகரிக்கப்பட வேண்டும்.

* உணவு தொடர்பான நோய்களின் அறிகுறிகள், உணவு உண்ட ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று வாரம் வரை கூட வெளிப்படலாம்.

* குடும்பத்தில் யாரேனும் பாதுகாப்பற்ற உணவால் பாதிக்கப்பட்டனர் என தெரிந்தால், உடனே இந்திய உணவுப் பாதுகாப்பு அலவலர்களிடம் குறைகளைத் தெரிவிக்கலாம்.

* உணவு கலப்படங்களைக் காண நேர்ந்தால், இது பற்றி உணவுப் பாதுகாப்பு அல்லது நிர்ணய அலுவலருக்குத் தெரிவி“க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நிர்ணய அலுவலர்களின் அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.

* உணவு, பாதுகாப்பற்றது என நிச்சயம் தெரிந்தால், அதுபோன்ற உணவுப் பாக்கெட்களைப் பிரித்து, அவற்றின் மேல் “அபாயம்’ எனக் குறியிட்டுத் தனிமைப்படுத்தவும் மற்றும் பாட்ச் எண், வாங்கிய தேதி, பட்டியல் எண், ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலருக்குத் தெரியப்படுத்தவும்.

மின்தடையின் போது உணவு பாதுகாப்பு

* குளிர்ப்பதனப் பெட்டியின் கதவுகளை அடிக்கடி திறக்கக்கூடாது. நீண்ட நேரம் மின்தடை இருக்கும்போது உணவுகளை ஐஸ் பெட்டியிலோ, உறை பனிப்பெட்டியிலோ வைக்கவும்.

* தொடர்ந்து மின்தடை இருந்தால், டின்களில் அøட்கப்பட்ட உணவு, பால் பவுடர், பழரசங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் ஆகியவற்றைப் பாதுகாக்க, மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக