பதற வைக்கும் பால் கலப்படம்:
தண்ணீர்
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும்.அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
மாவு
சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச்(மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
யூரியா:
1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும்போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
(SNF - மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா
கலப்படம் செய்யப்படுகிறது)
2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethyl
amino benzaldehyde (16 percent)-ஐச் சேர்த்தால் மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
வனஸ்பதி
ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி பாலை ஊற்றி அதனுடன் 10 துளிகள் அடர்ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து
அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்க்கும்போது பாலின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால் அது வனஸ்பதி கலப்படம் செய்யப் பட்ட பாலாகும்.
பார்மலின்
ஒரு சோதனைக் குழாயில் 10 மிலி பாலை எடுத்து அதில் 5மிலி அடர்கந்தக அமிலத்தை சோதனைக்குழாயின் உட்பக்கச்சுவற்றில் மெதுவாக விடும்போது (குலுக்காமல்) இரண்டு திரவ அடுக்குகளும் சந்திக்குமிடத்தில் ஊதா அல்லது நீல நிற வளையம் தோன்றினால் அது பார்மலின் சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
(நீண்ட நேரம் கெடாமல் இருக்க, பாலில் விஷத்தன்மை கொண்ட
பார்மலின் கலப்படம் செய்யப்படுகிறது.)
நுரைப்பான்கள்
(Detergents)
1) 10 மிலி பாலுடன் 10மிலி நீரைச் சேர்த்து நன்றாகக் குலுக்கும்போது
நுரை தருமானால் அது சோப்பு போன்ற நுரைக்கும் பொருள் சேர்க்கப் பட்ட கலப்படப் பாலாகும்.
2) ஒரு சோதனைக்குழாயில் 5மிலி பாலுடன் 0.1மிலி bromocresol purple கரைசலைச் சேர்த்தால் வெளிர் ஊதா நிறம் தருமானால் அது சோப்பு போன்ற நுரைக்கும் பொருள் சேர்க்கப்பட்ட கலப்படப் பாலாகும்.(பால் நுரை தருவதற்காக வியாபார நோக்கில் பாலில் அரைத்த சோப்புப் பவுடர் கலப்படம் செய்யப்படுகின்றது.)
அரைத்த சோப்புப் பவுடர்
ஒரு சோதனைக்குழாயில் 10 மிலி பாலுடன் 10மிலி சுடுநீரைச்
சேர்த்து அதனுடன் ஒன்று அல்லது இரு துளிகள் பீனாப்தளினைச்
சேர்த்தால் பிங்க் நிறம் தருமானால் அது சோப்பு சேர்க்கப்பட்ட
கலப்படப் பாலாகும்.
சர்க்கரை
ஒரு சோதனைக் குழாயில் 10 மிலி பாலை ஊற்றி அதனுடன்
5மிலி அடர்ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் ஒரு 0.1 கிராம்
ரிசோர்சினால் சேர்த்து நன்கு குலுக்கி அந்த சோதனைக் குழாயை
5 நிமிடம் கொதிநீரில் வைக்கும்போது பாலின்நிறம் சிவப்பு நிறமாக
மாறினால் அது சர்க்கரை கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
(தண்ணீர்க் கலப்படம் செய்த பாலில் SNF -ஐ கூட்ட ( லேக்டோ மீட்டர் ரீடிங் அளவிற்காக)பாலில் சர்க்கரை கலப்படம் செய்யப்படுகிறது.
குளுக்கோஸ்
1) ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி பாலை ஊற்றி அதனுடன்
அதனுடன் 3மிலி Barford's reagent--ஐ சேர்த்து நன்கு குலுக்கி கலந்து அந்த சோதனைக்குழாயை 3 நிமிடம் கொதிநீரில் வைத்து பின்னர் ஓடும் நீரில் குளிரச்செய்து அதனுடன் 1 மிலி Phosphomolybdic acid-ஐ சேர்த்து நன்கு குலுக்க நீல நிறம் தோன்றினால் அது குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற
தண்ணீர் கலப்படம் செய்த பாலில் குளுக்கோஸ் சேர்க்கப்படுகிறது)
2) Strip of diacetic-- ஐ 30-60 விநாடிகள் பாலில் அமிழ்த்தும்போது அதன் நிறம் மாறினால் அந்தப்பால் குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
நியுட்ரலைசர்கள்
(Neutralisers) (சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்றவை)
ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலை ஊற்றி அதனுடன்
5மிலி ஆல்கஉறால் மற்றும் 5 துளிகள்ரோசாலிக் அமிலத்தை
சேர்க்கும்போது பாலின் நிறம் பிங்க் கலந்த சிவப்பு நிறானால்
அது சோடியம் கார்பனேட் சோடியம் பைகார்பனேட் கலப்படம்
செய்யப்பட்ட பாலாகும்.
அம்மோனியம் சல்பேட்
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி சூடான பாலுடன் சிறிது சிட்ரிக் அமிலத்தை சேர்த்தால் கிடைக்கும் திடப்பொருளைப் (whey) பிரித்து, அதை மற்றொரு சோதனைக் குழாயிலிட்டு 0.5 மிலி Barium chloride-ஐச் சேர்க்கும்போது வீழ்படிவு ஏற்பட்டால் அது அம்மோனியம் சல்பேட் கலந்த கலப்படப் பாலாகும்.(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற அம்மோனியம் சல்பேட் சேர்க்கப்படுகிறது)
உப்பு
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி சில்வர் நைட்ரேட்டுடன்(0.8%)
மூன்று துளிகள் 1% பொட்டாசியம் டை குரோமேட் மற்றும் 1மிலி
பாலை கலந்தால் மஞ்சள் நிறம் கிடைத்தால் அது உப்பு கலந்த
கலப்படப் பாலாகும். சாக்லெட் நிறம் கிடைத்தால் உப்பு கலப்படம்
இல்லா பாலாகும்.(லேக்டோ மீட்டர் ரீடிங் அளவை கூட்டிக் காண்பித்து ஏமாற்ற உப்பு சேர்க்கப்படுகிறது)
பாலாடை நீக்கிய பால் பவுடர்
சிறிதளவு பாலில் நைட்ரிக் அமிலத்தை சொட்டுச் சொட்டாக
சேர்த்தால் பாலின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறினால் அது பாலாடை நீக்கிய பால் பவுடர் கலந்த கலப்படப்பாலாகும்.மஞ்சளாக மாறினால் சுத்தமான பாலாகும்.
போரிக் மற்றும் சாலிசிலிக் ஆசிட் பவுடர்
ஒரு சோதனைக் குழாயில் 5மிலி பாலுடன் சிறிது அடர்
கந்தக அமிலம் மற்றும் 0.5 % ferric chloride solution-ஐ சொட்டுச் சொட்டாக சேர்த்து நன்கு கலக்கினால் buff நிறம் கிடைத்தால் அது போரிக் ஆசிட் பவுடரும் ஊதா நிறம் கிடைத்தால் சாலிசிலிக் ஆசிட் பவுடரும் கலந்த கலப்படப் பாலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக