வணக்கம் உறவுகளே முன்னையா பதிவான பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் இலும் சொன்னேன் இதிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன் நான் ஒரு தேநீர் பிரியன் (அடிமை என்பதே சரியானது).
இந்த விடயத்தை நண்பர் குருபரன் தான் நினைவுக்கு கொண்டு வந்திருந்தார். நன்றி குரு. வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
தேநீரென்பது சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அத்துடன் அது தயாரிப்பதற்கு கட்டாயம் சீனி மற்றும் தேயிலை அத்தியாவசியமான பொருட்களாகிறது. அதன் கிக்கிற்கு காரணமே தேயிலை தான் அனால் தேயிலை கொஞ்சம் விலை கூடிய பொருள் பல தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிடைப்பதே இல்லை. அதற்கு தீர்வு தரும் ஒரே வழி என்ன தெரியுமா ? கீழே வாருங்கள்....
ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் சிறிதளவு சீனியை போட்டு வடிவாக சூடு காட்டுங்கள் அலுமினியப் பாத்திரம் எடுத்ததன் காரணம் மண் பாத்திரமானால் சினீப்பாணியை அது உறிஞ்சி விடும் அதனால் தான்.
சரி இப்போது சினி கொஞ்சம் கரியாகும் வரை காய்ச்சுங்கள் மூக்கை அரிக்கும் வாசம் ஒன்று எழும் அதே போல் காய்ச்சும் போது நீரை விடக் கூடாது
காரணம் அப்படி விட்டால் பின்னர் சீனி காய்ச்சப்பட்டு வற்றுவது கடினம் கருகாது. இப்போது கருகி வந்துவிட்டதா சரி அடுத்த கட்டமாக பானையை இறக்கி அதை கட்டிபட விடுங்கள்
அத்துடன் படிந்துள்ளதையும் சுரண்டி எடுங்கள் அப்புறம் தேநீருக்கு தேவையான அளவு நீரை விட்டு சூடாக்குங்கள் நன்கு சூடானதும் இந்த பாணிக் கட்டியை போடுங்கள்
தேயிலை அளவுக்கு நிறம் இல்லாவிடினும் கலவை அளவு மாறாவிடின் சுவையும் மாறாது அருமையான தேநீர் கிடைக்கும்.
யாரும் சண்டைக்கு வராதிங்கப்பா சும்மா ஒரு அனுபவப் பகிர்வு தான் இது தொடரும் முன்னையா இடக்கு முடடக்கப் பதிவுகள் கிழே உள்ள தொடுப்பில்.. (ஆனால் இங்கு பொய்யாகவோ மிகைப்படுத்தியோ நான் பகிரவில்லை உறவுகளே)
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு (உறவுகளே இந்த பதிவின் கருத்தையும் படிக்க தவற வேண்டாம் இது ஒரு காலப்பதிவு. புயலுக்கு முன் வீசிய தென்றல் வருடிய இடம்)
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு (உறவுகளே இந்த பதிவின் கருத்தையும் படிக்க தவற வேண்டாம் இது ஒரு காலப்பதிவு. புயலுக்கு முன் வீசிய தென்றல் வருடிய இடம்)
குறிப்பு - உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் இனி வழமை போல வாரமொரு பதிவும் வாரமொரு தளவருகையுமமென என் பயணம் தொடரும். என்னை நலம் விசாரித்த அத்தனை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக